Saturday, November 18, 2017
Sponsored Advertisements
Tamil Educational Organisations Activities
NSW Federation of Tamil Schools Inc நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு  
P.O.Box: 4102, Homebush, NSW 2140  
   
நியூ சவுத் வேலஸ் மாநிலத்தில் இயங்கும் அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளையும் ஓரணிப்படுத்தி அவற்றுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வளர்ப்பதற்கும், தமிழ்ப் பாடசாலைகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளும் சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதற்குமாக அமைக்கப்பட்ட இவ்வமைப்பு தனது நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.  
கூட்டமைப்பினால் “தமிழ்ப் புலமைச் சான்றிதழ்ப் பரீட்சைகள்” வருடாவருடம் அனைத்துத் தமிழ்ப்பாடசாலைகளிலும் நடத்தப்படுகின்றன.  
கூட்டமைப்பின் முயற்சியால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழ்ப் பரீட்சைக்குரிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பின் ஓர் அங்கமாகிய ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையம் இப்பரீட்சைக்குரிய வகுப்புக்களை நடத்தி வருகின்றது.  
அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம், பாடநூல் தயாரிப்பு, அனைத்துத் தமிழ்ப்பாடசாலைகளும் கலந்துகொள்ளும் கலைவிழா என்பன குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்.  
மேலதிக விபரங்களுக்கு:
திரு. பாஸ்கரன்
திரு. செல்வராஜா
02-9746 0567, 0407 975 605
02-9484 3155, 0425 293 328
 
உறுப்பினர் தமிழ்ப் பாடசாலைகள்:      
1. ஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம்  
2. ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையம்  
3. மவுண்ட் ரூயிட் தமிழ்க் கல்வி நிலையம்  
4. தமிழ் ஆலயம்  
5. ஓபன் வேன்ட்வேர்த்வில் தமிழ்க் கல்வி நிலையம்  
6. வுளொங்கொங் தமிழ்க் கல்வி நிலையம்  
7. ஆஷ்பீல்டு பாலர் மலர் தமிழ்க் கல்வி நிலையம்  
8. செவன்கில்ஸ் பாலர் தமிழ்க் கல்வி நிலையம்  
9. ஹோர்ஸ்வர்த்தி பாலர் மலர் தமிழ்க் கல்வி நிலையம்  
10. டெனிஸ்டன் ஈஸ்ட் பாலர் மலர் தமிழ்க் கல்வி நிலையம்  
         
Tamil Alayam - (Auburn Tamil School) தமிழாலயம் (ஓபன் தமிழ் பாடசாலை)
 
ஓபன் தமிழாலயம் கடந்த 8 வருடங்களாக பிரதி சனிக்கிழமை தோறும் மதியம் 2 மணி முதல் 4.30 வரை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.  
Auburn, Beralla, Regents Park, Lincombe, Granvill and Silverwater பகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் தங்கள் பிள்ளைகளையும் புதிய வருடத்தில் எமது பாடசாலையில் சேர்க்க விரும்பின் (4முதல் 18 வயது வரையுள்ள பிள்ளைகள்) கீழ் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலோ அல்லது பின்வரும் முகவரியிலோ தொடர்புகொள்ளவும்.  
பண்டைய மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியை தாய் மொழியை உங்கள் மக்களும் கற்றுக்கொள்ள உதவுங்கள்.  
அழைத்து வாருங்கள் இணைந்து கொள்ளுங்கள்  
Auburn North Primary School, Adderley Street, AUBURN
 
காலம்: பிரதி சனிக்கிழமை தோறும் மதியம் 2 மணிமுதல் 4.30 மணிவரை  
தொடர்புகளுக்கு: Ph: 02 9760 1029 / 0 (அதிபர்)  
       
 
Tamil Study Centre, Hombush Inc. தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்
Postal Address: P.O.Box: S4019, Homebush NSW 2140  
 
ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையம் பாலர் வகுப்பில் இருந்து HSC வகுப்பு வரை மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஒரே தமிழ்ப் பாடசாலையாகும். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலோக 100க்கு மேற்பட்ட மாணவர்களை NSW பாடத்திட்டத்திற்கு ஏற்ப HSC பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.  
HSC பரீட்சையில் தமிழ்ப் பாடத்தில் மாணவர்கள் பெற்ற பெறுபேறு அவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் அவர்களுக்கு தேவையான துறையை அடைவதற்குப் பெரிதும் உதவியுள்ளது.  
இங்கு மாணவர்களை பேச, எழுத, சாவிக்க பயிற்றுவிப்பதுடன் மேடைப்பேச்சு விவாதம், நாடகம், கட்டுரை வரைதல் போன்றவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.  
இங்கு மாணவர்கள் NSW வேறு கல்வித்திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமைய பயிற்றுவிக்கப்படடுகிறார்கள்.  
வகுப்பு நேரங்கள்:    
சனிக்கிழமைகளில் 9ம் வகுப்பு முதல் HSC வரை
காலை 10.30 இருந்து மாலை 2.00 மணி வரை

பாலர் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை
மாலை 2.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை
 
ஞாயிற்றுக்கிழமைகளில் சைவசமயப்பாடசாலை காலை 8.00மணிமுதல் 10.30 மணிவரை  
       
தொடர்புகளுக்கு:    

திரு.தி.திருநந்தகுமார் (தலைவர்)
திரு.க.சபாநாதன் (சைவப்பாடசாலை)

Ph: (02) 9764 4276
Ph: (02) 9642 7767
 
மேலதிக தொடர்புகளுக்கு: www.tsch.org.au / Email: info@tsch.org.au  
 
Mount Druitt Tamil Study Centre மவுண்ட் ரூயிட் தமிழ்க் கல்வி நிலையம்
3, Loloma Place, Rooty Hill, Mt Druitt 2770  
நடைபெறும் இடம்: Colyton Public School, Nelson Street,
Mt. Druitt 2770
   
பாடசாலை நேரம்: சனிக்கிழமைகளில் பி.ப 2.00 – பி.ப 4.30    
சிறுவர்களுக்குரிய பாணியில் அவர்கள் விரும்பும் வகையில் தமிழில் பேசுதல், வாசித்தல், எழுதுதல், பல்கலாச்சார சூழலில் வாழ எமது சிறார்களைப் பக்குவப்படுத்தல், தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றி அறிதல், தமிழ் பேசுவதன் அவசியத்தை உணர்தல் ஆகியவற்றோடு தற்போதைய சூழ்நிலைக்கிணங்க தமிழ் எனும் அமிழ்தினை உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுவதில் மனமகிழ்ச்சி அடைகின்றோம்.  
தொடர்புகளுக்கு:
Mr. K Kumanan (தலைவர்) Ph: 9636 9397  

Email: info@wtsc.org.au

   
    அலுவலக தொபேசி: Ph: 0423 238 411  
 
Sydney Tamil Resources Centre Inc. சிட்னி தமிழ் அறிவகம்
நாவல்கள், சிறுகதைகள், சித்திரக்கதைகள், இலங்கை, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் வார சஞ்சிகைகள், மாத இதழ்கள், அறிவுக்கு விருந்துபடைக்கும் நூல்கள், சமயப் புத்தகங்கள், அரசியல் புத்தகங்கள் என்பவற்றைப் படிக்கவும், இரவலாகப் பெற்றக்கொள்ளவும் நாடுங்கள்.  
  President Mr. Gunaranchithan, Ph: 9764 4122 or 9746 9888  
  Location சிட்னி தமிழ் அறிவகம்
54, The Crescent Homebush, NSW 2140
 
  Postal Address P.O.Box S420, Homebush, NSW 2140
Tel: 9764 4122
Email: gunav@optusnet.com.au
 
  Opening Hours 10.00 am to 4.00pm on Tuesday, Saturday and Sunday
6.00 to 8.00pm on Wednesday and Thursday
 
Anual Subscriptions for Membership:
GEneral: $30.00; Senior Citizens & Students: $ 15.00
 
 
Wentworthville Tamil Study Centre வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம்
ABN: 43 062 675 091
 
Darcy Road Public School
Darcy Road, Wentworthville, NSW 2145
 
Girraween Public School
Bando Street, Girraween, NSW 2145
 
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் சிட்னி வாழ் தமிழ் சிறுவர்களுக்கு தமிழ்க்கலாசார அறிவைக் கடந்த இருபது வருடங்களாக முன்னின்று போதித்து வருகின்றது. வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் தமிழ் வகுப்புகள் பிரதி சனிக்கிழமை தோறும் பி.ப.2.00 மணி முதல் 4.30 மணிவரை பின்வரும் இடங்களில் நடைபெறுகிறது.  
  தொடர்புகளுக்கு:    
  Mr. J Kathirgamanathan (தலைவர்) Ph: 9636 1467  
 

Email: kumanan.kanagasabapathy@resitech.nsw.gov.au

   
       
    P.O.Box: 557, Wentworthville, NSW 2145
www.wtsc.org.au
info@wtsc.org.au
 
 

Sponsored Advertisement
 
 
 
 
 
 
Event
Useful Telephone Numbers
Get Latest ADOBE Flash Player.
You need to upgrade your flash player to view this advertisement banner.
Click the image to get the latest flash player from Adobe inc.