Catholic Association of Sydney Tamils சிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம்
Patron: Most Reverend Kevin Manning DD, Bishop of (Parramatta)
எமது பணிகள்
வெஸ்மீடில் அமைந்துள்ள திரு. இருதயநாதர் ஆலயத்தில் பின்வரும் தினங்களின் தமிழில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றக்கிழமைகளில் பி.ப 5.30 மணிக்கு திருப்பலியும், திருப்பலிக்கு முன்னதாக 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறும்.
மார்கழி மாதம் 31ம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு திருப்பலி (நன்றித் திருப்பலி) இரவு 11.30 மணிக்கு கடந்து சென்ற ஆண்டிற்கான நன்றி மன்றாட்டுகள் தைப்பொங்கல் தினத்தன்று காலை 11.30 மணிக்கு திருப்பலி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 11.30 மணிக்குத் திருப்பலி
யேசுவின் பிறப்பினை நினைவு கூருமுகமாக மார்கழி மாதத்தில் “ஒளிவிழா” கொண்டாடப்படும்
புரட்டாதி மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் மல்கோவா அன்னையின் ஆலயத்தில் இரக்கத்தின் மாதா தேவாலயத்துக்கு யாத்திரை செய்து ஞான ஒடுக்க வழிபாடு நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் தவக்காலத்தின் 5வது ஞாயிற்றக் கிழமை பெறிமாவில் அமைந்துள்ள இரக்கத்தின் மாதா தேவாலயத்துக்கு யாத்திரை செய்து ஞான ஒடுக்க வழிபாடு நடைபெறும்
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் சிறுவர் முதியோருக்கான பலதரப்பட்ட விவிலியப் போட்டிகள் வெஸ்மீட் திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடாத்தப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டிலும் எமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நிதி சேகரித்து வடக்கு – கிழக்கு ஆயர்களுக்கு அனுப்பிவைத்தல்.
“இறை வார்த்தையும் வாழ்வும் வழியும்” என்ற கத்தோலிக்க வானொலி நிகழ்ச்சி அவுல்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரைக்கும், மறு ஒலிபரப்பு ஞாயிற்றக்கிழமை இரவு 10.00 மணிமுதல் 11.00 மணிவரை ஒலிபரப்பாகிறது.
மேலதிக விபரங்களுக்கு:
வண. பிதா வின்சன்ட் சவரிமுத்து (ஆன்மீக இயக்குனர்)
Ph: 54773073
திரு. இ. அருமைநாதன் (தலைவர)
Ph: 02 96259958
திரு. A.F. யேசுதாசன (செயலாளர்)
Ph: 02 9896 4003
Temples in Victoria
Tamil Catholic Association of Victoria
P.O.Box: 481, Rosanna, VIC 3084
Tel: (03) 6457 1066 (03) 9457 6714
Rev. Father. Albert Yogarajah
Service 3rd Sunday of each month 4pm